×

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: ஒன்றிய அரசின் விசாரணை அதிகாரி 3வது நாளாக சம்பவ இடத்தில் ஆய்வு

குன்னூர்: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஒன்றிய அரசின் விசாரணை அதிகாரியான ஏர்மார்ஷல் மன்வேந்தர்சிங் சம்பவ இடத்தில் 3ம் நாளாக இன்று ஆய்வு செய்தார். முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் 12 ராணுவ வீரர்கள் வந்த ஹெலிகாப்டர் கடந்த 8ம்தேதி நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகேயுள்ள காட்டேரி நஞ்சப்பசத்திரம் பகுதியில் விபத்திற்குள்ளானது. இதில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 80 சதவீதம் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ஹெலிகாப்டர் பைலட் வருண்சிங் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கன்டோன்மெண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், ஒன்றிய அரசால் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஏர் மார்ஷல் மன்வேந்தர் சிங் விபத்து நடந்த இடத்தில் 3வது நாளாக இன்று ஆய்வு செய்தார். அவருடன் முப்படை அதிகாரிகள் மற்றும் தமிழகஅரசின் விசாரணை குழுவும் சம்பவ இடத்தில் ஆய்வில் ஈடுபட்டு உள்ளது….

The post குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: ஒன்றிய அரசின் விசாரணை அதிகாரி 3வது நாளாக சம்பவ இடத்தில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Union govt ,Air Marshal Manvendersingh ,Union government ,Dinakaran ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா...