×

குமரி ராணுவ வீரர் உடல் தகனம்: கலெக்டர், எஸ்பி மரியாதை

குலசேகரம்: குலசேகரத்தை அடுத்துள்ள அண்டூர், புல்லை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (38). கடந்த 2002ம் ஆண்டு முதல் இந்தியா ராணுவத்தில் வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு சவுமியா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். தற்போது மெட்ராஸ் ரெஜிமென்ட் 4வது படை பிரிவில் ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்து வந்தார். கடந்த 8ம் தேதி பதுங்கு குழியில் பயிற்சியின் ேபாது கிருஷ்ண பிரசாத் மயங்கி விழுந்தார். உடனடியாக சக வீரர்கள் அவரை மீட்டு அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். நேற்று அவரது உடல் விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து இன்று காலை சொந்த ஊருக்கு ராணுவ வீரர்கள் உடலை கொண்டு வந்தனர். ராணுவ வீரர் கிருஷ்ண பிரசாத் உடலுக்கு மாவட்ட கலெக்டர்  அரவிந்த், எஸ்பி பத்ரி நாராயணன், சப் கலெக்டர் அலர்மேல்மங்கை, திருவட்டார் தாசில்தார் ரமேஷ், திருவட்டார் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜாண்சன், அயக்கோடு ஊராட்சி தலைவர் செல்லப்பன், ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், கன்னியாகுமரி மாவட்ட ஜவான் அமைப்பினர், ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.அதன்பின்னர் 11வது தமிழ்நாடு பட்டாலியன் என்சிசி அதிகாரி அன்சார் தலைமையில் 3 ரவுண்டுகளில் 24 குண்டுகள் முழங்க அவரது உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து இறுதி சடங்குகள் நடத்தி உடல் தகனம் செய்யப்பட்டது. கிருஷ்ண பிரசாத் குடும்பத்தை சேர்ந்த உறவினர் பலரும் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post குமரி ராணுவ வீரர் உடல் தகனம்: கலெக்டர், எஸ்பி மரியாதை appeared first on Dinakaran.

Tags : Kumari ,KULASEKARAM ,Krishnaprasad ,Andur, Pullai ,Indian Army ,Kumari Army ,Dinakaran ,
× RELATED குமரியில் வாட்டி வதைக்கும்...