×

ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் கடையநல்லூர் நியூ கேம்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளி மாணவருக்கு தங்கம்

கடையநல்லூர், மே 25: ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் கடையநல்லூர் மங்களாபுரம் நியூ கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் தங்கப்பதக்கம் பெற்றார் . கடையநல்லூர் மங்களாபுரத்தில் உள்ள நியூ கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவன் கவுதம் பாங்காக்கில் கடந்த 18, 19ம் தேதிகளில் நடைபெற்ற முதலாவது பசிபிக் ஆசிய சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று விளையாடினார். இதில் அவர் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். கவுதம் மூன்று முறை மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அவருக்கு பள்ளியின் தாளாளர் அக்பர் அலி, பள்ளியின் நிர்வாகத்தினர், பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

 

The post ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் கடையநல்லூர் நியூ கேம்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளி மாணவருக்கு தங்கம் appeared first on Dinakaran.

Tags : Kadayanallur New Cambridge Matric School ,Asian Chimpanzee Championship ,Kadayanallur ,New Cambridge Matriculation High School ,Kadayanallur Mangalapuram ,Asian Silambam Championship ,Gautham ,New Cambridge Matric Higher Secondary School ,Mangalapuram ,Asian Chilambam Championship ,Bangkok ,
× RELATED புளியங்குடி பகுதிகளில் நாளை மின்தடை