×

இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் திடீரென மழை

கரூர், மே 25: கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் மழை பெய்த நிலையில் நேற்று மாலையும் ஒரு மணி நேரம் திடீரென மழை பெய்தது.கடந்த ஆறு நாட்களாக மாலை நேரங்களில் கரூர் மாவட்டம் முழுதும பரவலாக மழை பெய்து, வெப்பத்தின் தாக்கத்தை குறைத்ததோடு, கருர் மாவட்டம் குளிர்ச்சியான நிலைக்கு சென்றுள்ளது. இந்நிலையில், மே 20ம்தேதி மாலை 4மணி முதல் இரவு 11 மணி வரை வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 5மணியளவில் திடீரென வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதோடு, லேசான இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கரூர் மாநகர பகுதி முழுவதும் விடாது மழை பெய்தது.
தினமும் மாலை நேரத்தில் மழை பெய்து வரும் நிலையில், நேற்று மாலை 5 மணி முதல் ஒரு மணி நேரம் வழக்கம் போல திடீரென மழை பெய்து கரூரை குளிர்வித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் திடீரென மழை appeared first on Dinakaran.

Tags : Karur ,Dinakaran ,
× RELATED கரூர்- திருச்சிராப்பள்ளி ரயில்வே...