×

அதிநவீன எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயக்கப்படும் 4 ரயில்கள்: தென்னக ரயில்வே அறிவிப்பு

 

திருப்பூர், மே 25: இந்திய ரயில்வே, ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அனைத்து ரயில்பெட்டிகளும் பாதுகாப்பான எல்.ஹெச்.பி ரயில்பெட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. பயோ டாய்லெட்கள், மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்பிரிங் பொறுத்தப்பட்ட போகிகள், விபத்துகளின்போது ஒரு ரயில்பெட்டி மற்ற ரயில்பெட்டியின் மீது மோதி பெரும் சேதம் விளைவிப்பதைத் தவிர்க்கும் வகையில் சென்டர் பப்பர் கப்ளர் இணைப்பு, தீப்பிடிக்காத பிட்டிங்குகள் மற்றும் ரயில்களின் உள்ளே சப்தம் கேட்பதைத் தவிர்க்கும் வகையில் இன்சுலேஷன் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பயணிகள் வசதிக்காக பெரிய ஜன்னல்கள், கால் வழுக்காத பிவிசி தரைவிரிப்புகள், ரயில்பெட்டிகள் இடையே தானியங்கிக் கதவுகள் போன்ற மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வசதிகளை கொண்ட அதிநவீன ரயில் பெட்டிகள் 4 ரயில்களில் இணைக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஹூப்பள்ளி – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07355) 25ம் தேதி முதல் எல்.ஹெச்.பி பெட்டிகளுடன் இயக்கப்படும்.

அதே போல் ராமேஸ்வரம்-ஹுப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில் (எண்.07356) 26ம் தேதி நாளை முதல் எல்.ஹெச்.பி பெட்டிகளுடன் இயக்கப்படும். அதே போல் ஹூப்பள்ளி-கொச்சுவேலி வாராந்திர விரைவு ரயில் (எண்.12777) 29ம் தேதி முதல் எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயக்கப்படும். அதே போல் கொச்சுவேலி – ஹூப்பள்ளி வாராந்திர விரைவு ரயில் (எண்:12778) ரயில் 30ம் தேதி முதல் எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயக்கப்படும். என தென்னக ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அதிநவீன எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயக்கப்படும் 4 ரயில்கள்: தென்னக ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : LHP ,Southern Railway ,Tirupur ,Indian Railways ,Southern Railways ,Dinakaran ,
× RELATED கடற்கரை- தாம்பரம் இடையே மின்சார...