×

674 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

 

ராமநாதபுரம், மே 25: ராமநாதபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 674 புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் கேணிக்கரை காவல்நிலைய எஸ்ஐ தினேஷ்பாபு தலைமையில் போலீஸார் நேற்று முன்தினம் இரவு வெளிப்பட்டிணம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் டூவீலரில் மூட்டையுடன் நின்றிருந்த ராமநாதபுரம் நாகநாதபுரத்தை சேர்ந்த சுதாகர் (42) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவரிடமிருந்து 57 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும், அவர் அளித்த தகவலின்பேரில் ஏர்வாடியைச் சேர்ந்த பாலமுருகன் (42) என்பவரிடம் இருந்து 272 கிலோ புகையிலை பொருட்களையும், சாயல்குடி அருகே உள்ள செவல்பட்டியை சேர்ந்த ராஜவேல் (48), மேலசெல்வனூரை சேர்ந்த பக்ரீவேல் (48), காக்கூரை சேர்ந்த சண்முகராஜன் (59) ஆகியோரிடம் இருந்து 315 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் 674 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6.87 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

The post 674 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Kenikarai ,station ,SI Dineshbabu ,Vadapattinam ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே...