×

வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை

 

நெல்லிக்குப்பம், மே 25: நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்அருங்குணம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (29). இவரது மனைவி கலையரசி. அவரது சகோதரர் நவீன்குமார் மற்றும் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டையை சேர்ந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு வீட்டை பூட்டிக் கொண்டு சென்றனர். பின்னர் திரும்பி வந்த இவர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தது.

அலமாரியில் இருந்த 2 வளையல்கள், 1 குருமாத், செயின் உள்ளிட்ட 2 பவுன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரொக்கப் பணம் ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இச்சம்பவம் குறித்து பிரவீன்குமார் நெல்லிக்குப்பம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

The post வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Nellikuppam ,Praveen Kumar ,Kalaiyarasi ,Panruti ,Naveenkumar ,Semakottai ,
× RELATED நெல்லிக்குப்பம் ஆலை ரோடு பகுதியில் ...