×

குன்னூர் பழக்கண்காட்சி காண குவிந்த சுற்றுலா பயணிகள்

 

ஊட்டி,மே25: கடந்த இரு மாதங்களாக கோடை சீசனை அனுபவிக்க நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாவட்ட, வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கடந்த 10ம்தேதி ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும்,ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் துவங்கப்ட்டது.

ஊட்டி சுற்றுலா பயணிகள் வசதிக்காக தொடர்ந்து 26ம் தேதி வரை மலர் கண்காட்சி நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.  இதனை தொடர்ந்து, ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரங்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால்,ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து மலர் அலங்காரங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். தற்போது ஊட்டியில் மழை பெய்த போதிலும், நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில்,குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று 64வது பழக்கண்காட்சி துவங்கியது.மூன்று நாட்கள் இந்த பழக்கண்காட்சி நடக்கிறது.

பழக் கண்காட்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவை காண்பதற்கும், படகு சவாரி செய்வதற்காக பிற்பகலுக்கு மேல் ஊட்டியில் குவிந்தனர். மேலும், குன்னூரில் போதிய லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் இல்லாத நிலையில், சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட்டனர். மேலும், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவு வந்ததால், பிற்பகலுக்கு மேல் ஊட்டி நகருக்குள் அதிகளவு வாகனங்கள் வந்தன. அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் ஆகிய சுற்றுலா தலங்களில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

The post குன்னூர் பழக்கண்காட்சி காண குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Coonoor Art Exhibition ,Ooty ,Nilgiris ,Nilgiris district ,Coonoor Farm Exhibition ,Dinakaran ,
× RELATED ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில்...