×

சென்னை ரயிலுக்குள் மழை தூங்காமல் தவித்த பயணிகள்

நாகர்கோவில்: சென்னையில் இருந்து சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மழை நீர் ஒழுகியதால், பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர். சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு கன்னியாகுமரிக்கு நேற்று காலை சென்ற, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மழை காரணமாக தண்ணீர் ஒழுகியது. எஸ்.2 பெட்டியில் தண்ணீர் ஒழுகுவதை பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் வைரலாக்கி உள்ளார்.

தண்ணீர் ஒழுகியதால், பயணிகள் தூங்க முடியாமல் விடிய, விடிய விழித்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்திய ரயில்வே ரயில்களை முறையாக பராமரிப்பது இல்லை. வருமானத்தை மட்டுமே குறியாக கொண்டு செயல்படுகிறது. பெட்டிகள் முறையாக பராமரிப்பு பணி செய்யப்படாததால், தான் இது போன்று மழை காலங்களில் ரயில் பெட்டிகளில் தண்ணீர் ஒழுக்கு ஏற்பட்டு வருவதாக பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் போன்ற அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்களை முறையாக பராமரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை முறையாக ஆய்வு செய்து நீர் கசிவு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பயணிகள் கூறி உள்ளனர்.

The post சென்னை ரயிலுக்குள் மழை தூங்காமல் தவித்த பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nagercoil ,Kanyakumari ,
× RELATED மணகுடியில் பேருந்து இயக்காததால் மக்கள் சிரமம்..!!