- RPF,
- மத்திய ரயில்வே ஆயுதக் களஞ்சியம்
- தண்டாயர்பேட்டை
- சென்னை
- ரயில்வே
- ரயில்வே பாதுகாப்பு படையின் ஆயுதக் களஞ்சியம்
- ரயில்வே பாதுகாப்பு படை
- இன்ஸ்பெக்டர்
- இராவணன்
தண்டையார்பேட்டை: சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக அருகே ரயில்வே பாதுகாப்பு படை ஆயுதக் கிடங்கு உள்ளது. இங்கு ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்கள் தங்கியிருந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் ராவணன் என்பவர், நேற்று கார்பன் வகை துப்பாக்கியை எடுத்து அதில் தோட்டாக்கள் இல்லை என நினைத்து, ட்ரிகரை அழுத்தியபோது, பயங்கர சத்தத்துடன் துப்பாக்கி வெடித்தது. இதில், ஆயுதக் கிடங்கில் நின்றிருந்த ஆர்பிஎப் தலைமைக் காவலர் சிவகுமாரின் வலது கால் முட்டியில் தோட்டா பாய்ந்தது.
அவரை மீட்டு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர். ஒத்திவாக்கத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற இருந்த நிலையில், அதற்காக துப்பாக்கிகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என சோதனை செய்தபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்த தோட்டா வெடித்தது தெரியவந்தது. இதுகுறித்து, சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து பூக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post சென்ட்ரல் ரயில்வே ஆயுத கிடங்கில் துப்பாக்கி தோட்டா வெடித்து ஆர்பிஎப் காவலர் படுகாயம் appeared first on Dinakaran.