×

தைவானைச் சுற்றிலும் 2வது நாளாக நவீன ஆயுதங்களுடன் சீனா ராணுவ ஒத்திகை :கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரிப்பு!!

தைவான் : தைவானை சுற்றி சீனா 2வது நாளாக மேற்கொண்டு வரும் ராணுவ பயிற்சியால் பரபரப்பு நிலவுகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன் தன்னாட்சி தீவு நாடான தைவானில் புதிய அதிபராக பொறுப்பேற்ற வில்லியம் லாய், தைவானை மிரட்டும் போக்கை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்து இருந்தார். இதற்கு பதிலடியாக நேற்று காலை தைவானைச் சுற்றி ராணுவ பயிற்சியினை சீனா திடீரென தொடங்கியது. இதனால் தைவான் நாட்டை முழுவதையும் பதற்றம் தொற்றிக் கொண்டது.தைவானின் கின்மென், மாட்சு, வுகியு, டோங்கியின் ஆகிய பல்வேறு தீவுகளைச் சுற்றி ராணுவ கப்பல்களும் விமானங்களும் பயிற்சிகளை மேற்கொண்டன.

இந்த நிலையில் 2வது நாளாக இன்றும் சீனா, தைவானைச் சுற்றி தனது ராணுவ பயிற்சியை தொடர்கிறது. தைவானின் பிரிவினைவாத செயல்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தைவானை தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாக உரிமைக் கோரும் சீனா, அந்நாட்டின் புதிய அதிபர் லாயை போர் மற்றும் வீழ்ச்சியை கொண்டு வரும் ஆபத்தான பிரிவினைவாதி என்று விமர்சித்து வருகிறது. 1949ல் நடந்த உள்நாட்டு போரின் முடிவில் சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தனது ஒருங்கிணைந்த நிலப்பரப்பாகவே கருதும் சீனா, அதன் மீது தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது.

The post தைவானைச் சுற்றிலும் 2வது நாளாக நவீன ஆயுதங்களுடன் சீனா ராணுவ ஒத்திகை :கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : China ,East Asian Region ,Taiwan ,William Lai ,Dinakaran ,
× RELATED தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து...