×

திருவையாறு தவில் வலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைக்குமா?: கலைஞர்கள் எதிர்பார்ப்பு

தஞ்சாவூர்: திருவையாறு தவில் வலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைக்குமா என கலைஞர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் இசைநாட்டியம் என கலைகளுக்கு பெயர் பெற்ற மாவட்டமாகும். தஞ்சாவூர் என்றால் நினைவுக்கு வருவது தலையாட்டி பொம்மை, ஓவியம், கலைத்தட்டு, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு. அந்த வரிசையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தவில் வலை பிரசித்தி பெற்றதாகும்.

கோயில் விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு வரவேற்பு நிகழ்ச்சிகளில் மேளம் என்று சொல்லப்படும் நாதஸ்வரம் இடம்பெறும். வெறும் நாதஸ்வரத்தை மட்டும் கேட்டால் ரசிக்காது. அதற்கு ஏற்றார்போல் தவில் இசைத்தால்தான் அதற்கு மவுசு கூடும். அந்த வகையில் தவிலுக்கு என்று பாரம்பரிய பெருமை உள்ளது. திருவையாறில் பாரம்பரியமாக தலில் வலை செய்து வருகின்றனர். தற்போது 5 குடும்பங்கள் மட்டும் இந்த கலையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவையாறு தவில் வலையில் உருவான தவிலை வாசிக்காத கலைஞர்களே உலகில் இல்லை என சொல்லலாம்.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாவட்டங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆஸ்திரேலியா, லண்டன் பேர்ன்ற வெளிநாடு வாழ் கலைஞர்கள் திருவையாறில் இருந்து தவில் வாங்கி செல்கின்றனர். இதுபற்றி தவில் வலை தயாரிப்பு கலைஞர் தினேஷ்குமார் கூறும்போது, திருவையாறில் இத்தகைய சிறப்பு வாய்ந்த தவில் வலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்க வேண்டும், வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆரம்ப காலத்தில் சிம்பு வலை செய்யப்பட்டு வந்தது. தற்போது அதே நாதம், அதே இசையில் பைப் வலை தயாரித்து வருகிறோம் என்றார்.

The post திருவையாறு தவில் வலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைக்குமா?: கலைஞர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvaiyaru Dhavil ,Thanjavur ,Tiruvaiyar ,Isha Natyam ,Nachiarko ,Tiruvaiyaru Davil Web ,
× RELATED தொழிலாளர்கள் வேலை இழப்பு...