×

பழைய குற்றாலத்தில் அனுமதி வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை..!!

தென்காசி: பழைய குற்றாலத்தில் அனுமதி வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள குற்றால அருவியில் ஒரு வாரமாக மாவட்ட ஆட்சியர் சுற்றுலா தலங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று நாளை இந்த தடை உத்தரவுகள் விளக்கி கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை 6 மணி முதல் மெயின் அருவி தவிர, பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி வழங்கிய சில மணி நேரத்திலேயே மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பதிவாகி நீரின் அளவு திடீரென அதிகரித்ததால் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்தருவியிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு கருதி போலீசார் தற்போது குளிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மெயின் அருவியில் பாதுகாப்பு நிலைகள் ஏற்பட்டு வருகிறது. நாளை குளிக்க அனுமதிக்கப்படலாம் என்று தெரிவித்த நிலையில், ஒரு வாரமாக விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்ட சில மணிநேரங்களில் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

The post பழைய குற்றாலத்தில் அனுமதி வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை..!! appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Koortala Falls ,Western Ghats ,Dinakaran ,
× RELATED குடியிருப்புக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது