×

அம்பாசமுத்திரம் அருகே ஊருக்குள் புகுந்து சிறுத்தைகள் அட்டாசம்: ஒரே வாரத்தில் 4 சிறுத்தைகள் சிக்கியதாக வனத்துறையினர் தகவல்

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த 4வது சிறுத்தை சிக்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பாபநாசம், அனவன் குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் யானை, சிறுத்தை, கரடி, உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது நுழைந்து கால்நடைகளை வேட்டையாடி செல்வது வழக்கம்.

அந்த வகையில் கடந்த 16ம் தேதி வேம்பையாபுரத்தில் ஒரு ஆட்டையும், அனவன் குடியிருப்பு கொட்டகையிலிருந்து மற்றொரு ஆட்டையும் சிறுத்தைகள் தாக்கி வனப்பகுதிக்கு இழுத்து சென்றன. இதை அடுத்து வேம்பையாபுரத்தில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 சிறுத்தைகள் சிக்கியுள்ளது. தற்போது அனவன் குடியிருப்பு பகுதியில் 4வது சிறுத்தை சிக்கியுள்ளது. இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 சிறுத்தைகள் சிக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The post அம்பாசமுத்திரம் அருகே ஊருக்குள் புகுந்து சிறுத்தைகள் அட்டாசம்: ஒரே வாரத்தில் 4 சிறுத்தைகள் சிக்கியதாக வனத்துறையினர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ambasamudram ,Forest Department ,Nellai ,Nellai district ,Babanasam ,Anavan ,Western Ghats ,
× RELATED திருப்பத்தூர் அருகே பள்ளி வளாகத்தில்...