×

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் குடிபோதையில் அர்ச்சகர் ரகளை: தோப்புக்கரணம் போடவைத்து பக்தர்கள் நூதனம்

தென்காசி: தென்காசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில் உதவி அர்ச்சகர் மது அருந்தி வந்து பக்தர்களிடம் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசி விஸ்வநாதர் உலகப்பன் கோயிலில் மடப்பள்ளி பொறுப்பாளராகவும், கோயிலில் நடக்கும் பூஜைகளில் உதவியாளராகவும் இருந்து வரும் ராஜாராமன் இரவு பணியின்போது மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த பக்தர்களுடன் நேற்று ரகளையில் ஈடுபடடுள்ளார்.

தினமும் மது அருந்தி விட்டு அவர் கோயிலுக்கு வருவதும், பக்தர்களுடன் தகராறு செய்வது குறித்து பலமுறை நிர்வாக அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புலப்படுகிறது. இதையடுத்து பக்தர்களே அவருக்கு தோப்புக்கரணம் போடச்சொல்லி நூதன தண்டனை வழங்கியுள்ளனர். இதையடுத்து பக்தர்களிடம் இனி இவ்வாறு நடந்து கொள்ள மாட்டேன் என்று ராஜாராமன் மன்னிப்பு கூறியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோயிலுக்கு மது அருந்தி வந்து ரகளையில் ஈடுபட்ட ராஜாராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கவுள்ளதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

The post தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் குடிபோதையில் அர்ச்சகர் ரகளை: தோப்புக்கரணம் போடவைத்து பக்தர்கள் நூதனம் appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Kashi Vishwanath Temple ,Kashi ,Vishwanath ,Rajaraman ,Madapalli ,Vishwanathar Vishwanathan Temple ,Thenkasi Kashi Vishwanathar Temple ,
× RELATED குடியிருப்புக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது