×

ஜம்மு-காஷ்மீருக்கு யாத்திரை சென்றபோது விபரீதம்.. அரியானா பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு!!

சண்டிகர்: அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த மினி பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்கு யாத்திரை சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து அம்பாலா மருத்துவமனையின் மருத்துவர் கௌஷல் குமார் கூறுகையில்;

அம்பாலா- டெல்லி – ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர் என்றார். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரியானா மாநிலம் அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ஜம்மு-காஷ்மீருக்கு யாத்திரை சென்றபோது விபரீதம்.. அரியானா பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Ariana ,Chandigarh ,National Highway ,Ambala district, Ariana state ,Mata Vaishno Devi ,Jammu and ,Kashmir ,
× RELATED வைஷ்ணவி தேவி கோயில் நகரில்...