×

இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகக்குழு கூட்டம்

 

கிருஷ்ணகிரி, மே 24: பர்கூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. பர்கூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் நேற்று நடந்தது. வட்டக்குழு உறுப்பினர் முனுசாமி தலைமை வகித்தார். இதில், மாநில குழு உறுப்பினர் கண்ணு, இன்றைய மாநில அரசியல் நிலை குறித்து விளக்கி பேசினார். வட்ட செயலாளர் வெங்கடேசன், உறுப்பினர்கள் கமலேஷ், பூபேஷ், ஐயப்பன், கல்பனா, உதயகுமார், தேவன், பர்கூர் நகர செயலாளர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத்தில் விவசாயிகளின் நிலை குறித்தும், மா விவசாயிகள் குறித்தும் பேசினார். கூட்டத்தில், கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50ஆயிரம் நிதி வழங்க வேண்டும். மாங்காய் டன்னுக்கு ரூ.40ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

பர்கூரில் நீதிமன்றம் அமைக்க வேண்டும். பர்கூர் ஆற்றில் கழிவுகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். ஒகேனக்கல் குடிநீர் அனைத்து கிராமங்களுக்கும் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலத்தில், பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வருவோருக்கு, உடனே பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Communist India ,Krishnagiri ,Communist Party of India ,Parkur ,Circle Committee ,Munusamy ,Kannu ,Indian Communist Executive Committee ,Dinakaran ,
× RELATED மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு...