×

கோவை வ.உ.சி மைதானத்தில் அரசுப்பொருட்காட்சி நாளை துவக்கம்

 

கோவை, மே 24: கோவை மாவட்டத்தில் அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலான அனைத்து துறைகளின் சார்பில் அரசுப்பொருட்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, இந்தாண்டு பொருட்காட்சி நாளை (25ம் தேதி) மாலை 5 மணிக்கு வஉசி மைதானத்தில் துவங்குகிறது. கலெக்டர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசுப்பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன் வளத்துறை உள்பட 27 அரசுத் துறைகளும், கோவை மாநகராட்சியின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், வீட்டுவசதி வாரியம், ஆவின், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய அரசு சார்பு நிறுவனங்கள் சார்பிலும் கண்காட்சி அரங்குகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் 45 நாட்களுக்கு தொடர்ந்து பொருட்காட்சி நடைபெறும். பொருட்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10, பள்ளிகள் மூலம் அழைத்து வரப்படும் மாணவ, மாணவியர்களுக்கு சலுகையாக ரூ.5 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post கோவை வ.உ.சி மைதானத்தில் அரசுப்பொருட்காட்சி நாளை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Government Exhibition ,VUC ,Coimbatore ,VUC Stadium ,
× RELATED கோவை பந்தய சாலை நடைபாதையில் இருந்த...