×

உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து தொழிற்பழகுநர் பயிற்சி சான்றிதழ்களை பெறலாம்: கலெக்டர் தகவல்

 

திருவள்ளூர், மே 24: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் கூறியிருப்பதாவது: சென்னை, அம்பத்தூர், அரசினர் தொடர் அறிவுரை மையம் தற்போது திருவள்ளூர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் என்ற பெயரில் திருவள்ளூர், மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலக கட்டிட முதல் தளத்தில் இயங்கி வருகிறது.

தொழிற்பழகுநர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசு வழங்கும் (என்ஏசி) தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் 1971 முதல் 2018ம் ஆண்டு வரையிலான சான்றிதழ்கள் இவ்வலுவலகத்தில் உள்ளது. இந்த அலுவலகத்தின் வாயிலாக தொழிற்பழகுநர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் உடன் உரிய ஆதாரங்களுடன் இந்த அலுவலகத்தினை அணுகி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து தொழிற்பழகுநர் பயிற்சி சான்றிதழ்களை பெறலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,District Collector ,T.Prabhushankar ,Chennai, Ampathur ,Thiruvallur, District Skill Training Office ,Dinakaran ,
× RELATED முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, மாவட்ட...