×

எல்லாபுரம் ஒன்றியத்தில் அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் தயார்: அடுத்த வாரம் விநியோகம்

 

ஊத்துக்கோட்டை,மே 24: எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் அடுத்த வாரம் பாட புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பாடபுத்தகம் வழங்க அரசு முடிவு செய்தது. இந்நிலையில் நேற்று அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி மற்றும் தென்னிந்திய திருச்சபை பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு, 1 முதல் 8ம் வகுப்பு வரை பாடபுத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக பெரியபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் வைக்கப்பட்டது.

இதில் எல்லாபுரம் ஒன்றியத்தில் அரசு தொடக்கப்பள்ளி 74, நடுநிலைப்பள்ளி 21, அரசு நிதி உதவி பெறும் பள்ளி 4, தென்னிந்திய திருச்சபை பள்ளி 4 என மொத்தம் 103 பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்கள் வந்தது. மேலும் இதனுடன் நோட்டு, செருப்பு, ஷூ, பேக் மற்றும் வண்ண பென்சில்கள் ஆகியவையும் வந்தது. இவை அனைத்தும் வரும் 31ம் தேதிக்குள் 6,200 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post எல்லாபுரம் ஒன்றியத்தில் அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் தயார்: அடுத்த வாரம் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Ellapuram Union ,Oothukottai ,Tamil Nadu ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே ஆரோக்கிய ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்