×

7 நாளுக்குப்பின் தொட்டபெட்டா சிகரத்தை ரசித்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி: தமிழ்நாட்டிலேயே மிக உயரமான சிகரங்களில் ஒன்றான ஊட்டி தொட்டபெட்டாவை காண சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்வது வழக்கம். இதற்கான பாஸ்டேக் நுழைவு கட்டண வசூல் மையத்தை நுழைவாயில் பகுதியில் இருந்து சுமார் அரை கிமீ தொலைவில் மாற்றும் பணிக்காக கடந்த 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை 7 நாள் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 7 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் நுழைவுவாயில் திறக்கப்பட்டது. இதனால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா சிகரத்துக்கு சென்று பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

The post 7 நாளுக்குப்பின் தொட்டபெட்டா சிகரத்தை ரசித்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Totapeta ,Ooty ,Ooty Thotapeta ,Tamil Nadu ,Pastac ,Totapeta Peak ,Dinakaran ,
× RELATED ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில்...