×

பிரதமர் மீது நடவடிக்கை கோரி காங்கிரசார் புகார் மனு

சென்னை: பிரதமர் மோடி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் டிஜிபியை நேரில் சந்தித்து காங்கிரசார் புகார் மனு அளித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, பொதுச் செயலாளர்கள் டி.செல்வம், பி.தாமோதரன், என். அருள் பெத்தையா, வழக்கறிஞர் துறை தலைவர் கே.சந்திரமோகன், இணைத் தலைவர் எஸ்.கே. நவாஸ், வி.இசட். விக்டர், ராஜேஷ் ஆகியோர் நேற்று தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவாலை, சந்தித்து புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், ‘‘பிரதமர் நரேந்திர மோடி பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டில் உள்ளதாக கூறி மறைமுகமாக தமிழர்கள் திருடர்கள் என்று சொல்லாமல் சொல்லி பொதுவெளியில் கருத்து தெரிவிததுள்ளார். இது இரு மாநில மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அவதூறு பேச்சு மற்றும் தேச ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை சீர்குலைக்க தூண்டுவதாக உள்ளது. எனவே அவரை விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறை இயக்குனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.

The post பிரதமர் மீது நடவடிக்கை கோரி காங்கிரசார் புகார் மனு appeared first on Dinakaran.

Tags : Congress ,CHENNAI ,DGP ,Modi ,Tamil Nadu ,President ,K. Selvaperunthakai ,General Secretaries ,D. Selvam ,P. Damodaran ,N. Arul Bethiah ,Attorney ,Department ,Dinakaran ,
× RELATED திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கை...