×

மகாராஷ்டிராவில் பயங்கரம்; ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 7 பேர் பலி: 40 பேர் மருத்துவமனையில் அனுமதி

தானே: மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்துச் சிதறியதில் தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், காயமடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவலி தனியார் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மதியம் 1.40 மணியளவில் பாய்லர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் தொழிலாளிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

தகவலறிந்ததும் விரைந்து வந்த போலீசார், தீயணைப்புபடை மற்றும் பேரிடர் மேலாண்மை படையினருடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 43 தொழிலாளர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்தின் போது ஏற்பட்ட தீ அருகிலுள்ள மேலும் 3 தொழிற்சாலைகளுக்கு பரவியது. இதன் காரணமாக, தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் கரும்புகை சூழ்ந்தது.

The post மகாராஷ்டிராவில் பயங்கரம்; ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 7 பேர் பலி: 40 பேர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Terror ,Thane ,Maharashtra ,Dombivali Private Chemical Factory ,Thane District, Maharashtra ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிரா மாநிலம் தானே கெமிக்கல்...