×

பரமாத்மாவால் அனுப்பப்பட்ட மோடி, அதானி மற்றும் அம்பானி கேட்பதை 2 நிமிடங்களில் நிறைவேற்றுகிறார்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டெல்லி: கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்ட போது செல்போனில் டார்ச் அடிக்க சொன்ன மோடியையா கடவுள் அனுப்பி வைத்தார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி; காங்கிரஸ் வாக்காளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசினார். அப்போது; ரயில்வே, துறைமுகம், விமான நிலையங்கள், என நாட்டின் அனைத்து சொத்துக்களையும் அதானிக்கு கொடுக்கிறார்கள். அதே சமயம், ஒரு ஏழைக் கடன் தள்ளுபடி, சாலை, மருத்துவமனை, கல்வி, எதுவாக இருந்தாலும், நரேந்திர மோடிக்கு கவலையில்லை.

கோடீஸ்வரர்களின் பாக்கெட்டில் பணத்தை போட்ட நரேந்திர மோடி, அந்த பணத்தில் அமெரிக்கா, துபாயில் நிலம் வாங்கி வியாபாரம் செய்தார்கள். இந்த நாட்களில் பிரதமர் சொல்லும் விஷயங்களை யாரேனும் ஒரு சாமானியர் கூறினால், நீங்கள் அவரை நேராக மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வீர்கள். பிரதமர் மோடி தன்னை மனித பிறவி அல்ல என்றும், கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் என்றும் பேட்டியளித்ததை ராகுல் காந்தி சுட்டிக் காட்டினார்.

கொரோனா காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துகொண்டிருந்த போது செல்போனில் டார்ச் லைட்டை ஒளிரவிட சொன்ன மோடியையா கடவுள் அனுப்பி வைத்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறி கொள்ளும் மோடி மக்கள் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாமல் அதானி மற்றும் அம்பானியின் விருப்பங்களுக்காக மட்டுமே செயல்படுகிறார். இந்தியா கூட்டணி அரசாங்கத்தை அமைத்தவுடன் அரசியலமைப்பு பிரமாணத்தை அவமதிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

The post பரமாத்மாவால் அனுப்பப்பட்ட மோடி, அதானி மற்றும் அம்பானி கேட்பதை 2 நிமிடங்களில் நிறைவேற்றுகிறார்: ராகுல் காந்தி கடும் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Paramathma ,Adani ,Ambani ,Rahul Gandhi ,Delhi ,God ,Delhi, ,Congress ,B. RAHUL GANDHI ,Rahul ,
× RELATED திருப்பூர் அருகே அதானி கேஸ் பைப் லைன்...