×

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்டப் படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை; பி.ஏ. பட்டப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30.05.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துத் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட படிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப் படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டயப் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகின்றது. இக்கல்வி நிலையம் நடத்தி வரும் பி.ஏ (தொழிலாளர் மேலாண்மை) பட்டப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவுற்ற நிலையில், தற்போது மேற்கண்ட படிப்பிற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 30.05.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் – ரூ. 200/-
For SC/ST – ரூ. 100/-

(சாதிச் சான்றிதழ் நகல் தாக்கல் செய்ய வேண்டும்)
விண்ணப்பங்களை தபாலில் பெற, விண்ணப்ப கட்டணத்திற்கான ரூ.200/- (SC/ST – ரூ.100/-) மற்றும் தபால் கட்டணம் ரூ.50/- க்கான வங்கி வரைவோலையினை “The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai” என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால் / விரைவு அஞ்சல் / கொரியர் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பட்டபடிப்பில் சேர விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 30.05.2024 இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்டப் படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Labour Education Centre ,Chennai ,Tamil Nadu Labour Education Centre, P. A. ,M. ,Tamil Nadu Labour College ,Dinakaran ,
× RELATED தொழிலாளர் மேலாண்மை கல்வி பட்ட, பட்ட...