×

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மோதல்: பக்கதர்கள் அவதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் வடகலை -தென்கலை பிரிவினர் இடையே திவ்ய பிரபந்தமர், வேத பாரயணம், ஸ்தோத்திர பாடல் பாடுவதில் ஒவ்வொரு ஆண்டும் மோதல் ஏற்படுகிறது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை -தென்கலை பிரிவினர் கோஷ்டி பாடும் உரிமை தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிழுவையில் உள்ளது. இந்த நிலையில் கோயில் திருவிழாக்கள், பூஜை முறைகளில் குறுக்கீடு செய்வது, தென்கலை – வடகலை என இருபிரிவினர் கோஷ்டி பாடகூடாது என கோயில் நிர்வாகம் உத்தரவிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்றுவரும் நிலையில், கடந்த 4 நாட்களாக காலை, மாலை என இரு வேலைகளிலும் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. வீதி உலாவின் போது வரதராஜ கோயில் கங்கைகொண்டான் மண்டபத்தில் எழுந்தருளி பக்கத்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

கங்கைகொண்டான் மண்டபத்தில் கோயிலில் உரிமையுள்ள தாதாசாரி குடும்பத்தினர் மந்திர புஷ்பம் எனப்படும் பாடலை பாடி பூஜை செய்து வருகின்றனர். நாள்தோரும் தாதாசாரி குடும்பத்தினர் வேத மந்திரங்களை பாடும் போது தென்கலை பிரிவினர் தங்களும் வேத மந்திரங்களை பாடுவோம் என கூறி கோயில் நிர்வாகத்தினர் வந்தனர். தென்கலை பிரிவினர் பாடல் பாடக்கூடாது என கூறிய நிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இது குறித்து விசாரிக்க சென்ற காவல்துறையினரிடம் கோயில் வளாகத்தில் பாட மட்டுமே தடை இருப்பதாகவும் வெளியிடங்களில் பாட தடையில்லை எனவும் தொடர்ந்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். நாள் தோரும் நடைபெறும் தென்கலை – வடகலை பிரிவினர் பிரச்சனையால் சுவாமி தரிசனம் செய்யவரும் பாதிக்கப்படுகின்றனர்.

The post காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மோதல்: பக்கதர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Watagala ,Tenkala Divisions ,Varadaraja Perumal Temple ,Kanchipuram ,Avati ,Vadagala- ,Tenkala ,Varadaraja ,Perumal ,Temple ,Kanchipuram Varadarajar Temple ,Divya Prabhandamar ,Vadagala ,Perumal Temple ,Bakhtarak ,
× RELATED பெருமாள் கோயிலில் நகை திருட்டு