×

கர்நாடகாவில் காஸ் கசிந்து தம்பதி 2 மகள்கள் உயிரிழப்பு


மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரு டவுன் யரகனஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் குமாரசாமி (45). மனைவி மஞ்சுளா (39). இவர்களது மகள்கள் அர்ச்சனா (19), சுவாதி (17). இவர்களது சொந்த ஊர் சிக்கமகளூரு மாவட்டம் கடூர். சலவை தொழில் செய்து வந்தார்கள். பிழைப்புக்காக மைசூருவில் குடியேறினர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிக்கமகளூருவில் நடந்த உறவினரின் திருமணத்துக்கு சென்று விட்டு மைசூருவுக்கு திரும்பினர். பின்னர் வழக்கம் போல வேலைகளை தொடங்கினர். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கினர். நேற்று காலையில் எழும்பவில்லை. இந்நிலையில் 2 தோழிகள், இவர்களது வீட்டுக்கு வந்தனர்.

கதவை தட்டியபோது திறக்கப்படவில்லை. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். குமாரசாமி, மஞ்சுளா, அர்ச்சனா, சுவாதி ஆகிய 4 பேரும் பிணமாக கிடந்தனர். அதிர்ச்சியடைந்தனர். வீட்டில் காஸ் நெடி வந்ததால் பதற்றமடைந்தனர். தகவலறிந்து ஆலனஹள்ளி போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தியபோது வீட்டில் இருந்த 3 சிலிண்டர்களில், ஒரு சிலிண்டரில் மட்டும் காஸ் கசிவு ஏற்பட்டிருந்ததும், அதனால் 4 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மைசூரு கே.ஆர். அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கர்நாடகாவில் காஸ் கசிந்து தம்பதி 2 மகள்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Mysuru ,Kumaraswamy ,Yarakanahalli ,Mysuru Town, Karnataka ,Manjula ,Archana ,Swathi ,Kadur ,Chikkamagaluru district ,
× RELATED கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது