×

புனேவில் படகு கவிழ்ந்து விபத்து: உயிரிழந்த 5 பேரின் உடல்கள் மீட்பு!

புனே: புனேவில் படகு கவிழ்ந்த விபத்தில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள உஜானி அணைக்கட்டுப் பகுதியில் கலாஷி மற்றும் புகாவ் கிராமங்களுக்கு இடையே படகு சேவை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது 7 பேரை ஏற்றி சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் படகில் இருந்த மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகிய 6 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படகில் இருந்த உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிலை அதிகாரி ஒருவர் மட்டும் நீந்தி தப்பித்துள்ளார். இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த 6 பேரில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மராட்டியத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

The post புனேவில் படகு கவிழ்ந்து விபத்து: உயிரிழந்த 5 பேரின் உடல்கள் மீட்பு! appeared first on Dinakaran.

Tags : Pune ,Kalashi ,Bukhaw ,Ujani Dam ,Pune district ,Marathia ,Dinakaran ,
× RELATED பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா பயன்படுத்திய சொகுசு கார் பறிமுதல்