×

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 22,852 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்..!!

மும்பை: தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 22,852 புள்ளிகளை எட்டி புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்து உயர்ந்து வந்த குறியீட்டு எண் நிஃப்டி 245 புள்ளிகள் அதிகரித்து 22,852 புள்ளியை தொட்டது. அதானி எண்டர் பிரைசஸ் பங்கு 5%, ஆக்சிஸ் வங்கி பங்கு 3%, எல் அன்ட் டி 2.9%, மாருதி சுசூகி பங்கு 2% விலை உயர்ந்து விற்பனையானது. அதானி போர்ட்ஸ், இண்டஸ் இண்ட் வங்கி, ஐஷர் மோட்டார்ஸ், எம் அன்ட் எம் பங்குகள் 2% க்கு மேல் விலை உயர்ந்து வர்த்தகமாகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 843.7 புள்ளிகள் அதிகரித்து 75,064 புள்ளிகளை தொட்டது.

The post தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 22,852 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்..!! appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,Adani Ender… ,Dinakaran ,
× RELATED மும்பையில் பல இடங்களில் மழை நீர் தேக்கம்