×

கடும் வெயிலால் வறண்டு கிடந்த கொத்தப்பாளயம் தடுப்பணை நிரம்பி வழிகிறது

*தொடர் மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது

அரவக்குறிச்சி : தொடர் மழையின காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வழிகின்றது. கடும் வெயில் காரணமாக தண்ணீர் ஓட்டமில்லாமல் வரண்டு கிடந்த அமராவதி ஆற்றில் அரவக்குறிச்சி கொத்தப்பாளயம் தடுப்பணை தண்ணீர் வழிந்தோடுகின்றது.கொத்தப்பாளயம் தடுப்பணை தண்ணீரினால் நிலத்தடி நீர் மட்டம் உயரும், அரவக்குறிச்சி பகுதியின் 5 கிமீ சுற்றுப்பகுதியில் வீடுகளில் ஆழ்குழாய் கிணறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர் மட்டம் உயருகின்றது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடும் வெயிலின காரணமாக விவசாயக் கிணறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு குறைந்திருந்தது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்தது. வெயில் 103 டிகிரி க்கும் மேல் சென்றது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.சாலைகளில் தார் உருகும் நிலையில் பளீரென்று அனல் காற்றுடன் வெயில் அடித்தது.

மதியம் 12 மணிக்கு மேல் மாலை 5 மணி வரை மக்கள் வெளியே தலைகாட்ட முடியாமல் தவித்தனர். ஆண்டு தோறும் நிகழும் தவிர்க்க முடியாத நிகழ்வு இது என்றாலும் அரவக்குறிச்சி பகுதியில் அனல் காற்றுடன் வெயில் 103 டிகிரி வரை வாட்டி வதைப்பதால். மக்களின் இயல்பு வாழ்கை பாதித்தது. இதனால் அமரவதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழையில்லாமல் கடும் வெயிலினால் அமரவதி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்தது. இதனால் அமரவதி ஆற்றில் நீர் வரத்து இல்லாமல் பலைவனம் போல் காட்சியளித்தது.

அமராவதி ஆற்றில் அரவக்குறிச்சி கொத்தப்பாளையம் தடுப்பணை தண்ணீர் ஓட்டமில்லாமல் வறண்டு கிடந்தது. இந்நிலையில் அமராவதி ஆற்றின் கீழ்பகுதியில் தொடர்ந்து 6 நாட்களாக கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அமராவதி ஆற்றில் தண்ணீர் ஓடுகின்றது.தொடர் மழையின காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வழிகின்றது. கடும் வெயில் காரணமாக தண்ணீர் ஓட்டமில்லாமல் வறண்டு கிடந்த அமராவதி ஆற்றில் அரவக்குறிச்சி கொத்தப்பாளையம் தடுப்பணை தண்ணீர் வழிந்தோடுகின்றது.

கொத்தப்பாளயம் தடுப்பணை தண்ணீரினால் நிலத்தடி நீர் மட்டம் உயரும், அரவக்குறிச்சி பகுதியின் 5 கிமீ சுற்றுப்பகுதியில் வீடுகளில் ஆழ்குழாய் கிணறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர் மட்டம் உயருகின்றது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கடும் வெயிலால் வறண்டு கிடந்த கொத்தப்பாளயம் தடுப்பணை நிரம்பி வழிகிறது appeared first on Dinakaran.

Tags : Kothapalayam barrage ,Aravakurichi ,Aravakurichi Kothapalayam barrage ,Amaravati river ,
× RELATED அரவக்குறிச்சியில் உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும்