×

பிக்சல் செல்போனை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய கூகுள் நிறுவனம் திட்டம்

கலிபோர்னியா: பிக்சல் செல்போனை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிற்சாலையில் பிக்சல் செல்போன்களை தயாரிக்கை பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இந்தியாவில் உள்ள சந்தை வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாட்டில் பிக்சல் செல்போன்களை தயாரிக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் வருவதன் மூலம் தமிழ்நாடு உயர்தொழில்நுட்ப சாதனங்களின் உற்பத்தி மையமாக உருவெடுத்து வருகிறது.

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் தனது துணை நிறுவனமான விங்எல்எல்சி மூலம் டிரோன்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் டிரோன்கள் மூலம் பொருள் விநியோகிக்கும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கிவருகிறது.

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜ தலைமையிலான அதிகாரிகள் குழு அண்மையில் அமெரிக்கா சென்று கூள் நிர்வாகிகளை சந்தித்தனர். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தமிழ்நாட்டில் தனது தயாரிப்புகளை உற்பத்தி செய்வது குறித்து கூகுள் ஆலோசனை நடத்திவருகிறது.

ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்திக்காக ஐபோன்களை ஃபாக்ஸ்கான், பெகட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை தமிழ்நாட்டில் தயாரித்து வருகின்றன.

The post பிக்சல் செல்போனை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய கூகுள் நிறுவனம் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Google ,Tamil Nadu ,California ,Foxconn ,India ,
× RELATED உன்னை வழி கேட்டதுக்கு இங்க கொண்டு...