×

தென்காசி குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கை கண்டறிய நவீன சென்சார் கருவி பொருத்துவது குறித்து ஆய்வு

தென்காசி: தென்காசி குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கை கண்டறிய நவீன சென்சார் கருவி பொருத்துவது குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. சென்னை அண்ணா பலகலைக்கழக பேராசிரியர்கள் குழு குற்றால அருவியின் மேல் உள்ள வனப்பதியில் ஆய்வு நடத்தப்படவுள்ளது.

குற்றால அருவிகளில் சமீப காலமாக தீடீர் திடீர் என வெள்ள பெருக்கு ஏற்பட்டு உயிர் பலி என்பது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. கடந்த 17-ம் தேதி பழைய குற்றாலருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 15 வயது சிறுவன் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். பண்டைய காலங்களில் பெருமழை வரும் போது வெள்ளம் வருவதை முன்கூட்டியே கணித்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால் தற்போது வெள்ளப்பெருக்கு எப்போது ஏற்படும் என கணிக்கமுடியாத சூழல் நிலவுகிறது.

இதனை தவிர்க்க நவீன சென்சார் கருவிகளை மலைப்பகுதிகளில் பொறுத்தி இதன் மூலம் வெள்ளம் வருவதை முன்கூட்டியே கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது. இதனை அடுத்து நவீன சென்சார் கருவிகளை அனைத்து அருவிகளின் மேல் பகுதியில் பொறுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக இன்று அண்ணாபல்கலைகழக பேராசிரியர் குழுவினர் ஆய்வுக்காக குற்றாலம் சென்றுள்ளனர். அவர்கள் மலை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். எந்தெந்த இடங்களில் இந்த கருவிகளை பொறுத்தலாம். எவ்வளவு தூரத்தில் அதனை நிர்மானித்து அதில் இருந்து வரும் சிக்னல்கள் மூலம் எவ்வாறு வெள்ள அபாயத்தை முன்கூட்டியே கணிக்க முடியும் என்பது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

பேராசிரியர்கள் குழு ஆய்வுகளை முடித்து வந்த பின்னரே எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தெரியவரும்.

The post தென்காசி குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கை கண்டறிய நவீன சென்சார் கருவி பொருத்துவது குறித்து ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,TENKASSI ,Anna University of Chennai ,Dinakaran ,
× RELATED தென்காசியில் தபால் வாக்கு...