×

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் பலாத்காரம்

*வாலிபர் கைது

கோவில்பட்டி : கயத்தாறில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (26). இவர், தனது வீட்டினருகே வசித்து வரும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது இளம்பெண்ணை அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த இளம்பெண்ணின் பெற்றோர், இதுகுறித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் பலாத்காரம் appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Gayathar ,Marimuthu ,Gayatharu ,Thoothukudi district ,
× RELATED கோவில்பட்டியில் சாலையில் நின்றவர்கள் மீது மரம் விழுந்து பெண் காயம்