×

“பிரதமர் மோடியை கொன்று விடுவேன்” என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு இந்தியில் மர்ம நபர் கொலை மிரட்டல்: சென்னையில் பரபரப்பு

சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு பிரதமர் மோடிக்கு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பிரதமர் மோடியை கொலை செய்து விடுவேன் என இந்தியில் பேசிவிட்டு மர்மநபர் இணைப்பை துண்டித்தார். என்.ஐ.ஏ அதிகாரிகள் அளித்த புகாரை அடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் தற்போது ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்.

அவரது பிரச்சாரம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் பிரச்சாரத்தில் பேசிய சில கருத்துக்களை எதிர்க்கட்சியினர் திரித்து அவரை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அவருக்கு சென்னையில் உள்ள என்.ஐ.ஏ கட்டுப்பாட்டு அறைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இந்தியில் பேசிய மர்ம நபர், பிரதமர் மோடியை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் எண் குறித்தும், சிம்கார்டை பயன்படுத்திய நபர் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் ஏற்கனவே மிரட்டல் விடுத்த நபரா? அல்லது புதிதாக மிரட்டல் விடுக்கும் நபரா? என்பது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post “பிரதமர் மோடியை கொன்று விடுவேன்” என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு இந்தியில் மர்ம நபர் கொலை மிரட்டல்: சென்னையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,NIA ,Chennai ,Modi ,Chennai Prasaiwakak ,N. I. ,room ,
× RELATED குவைத் தீ விபத்தில்...