×

திருவாரூர் வலங்கைமானில் ராஜிவ் நினைவு நாள் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

வலங்கைமான், மே 23: வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக நடைபெற்ற ராஜிவ் காந்தி நினைவு தின நிகழ்ச்சியில் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 33 வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது மாவட்டத் தலைவர் குலாம் மைதீன் தலைமையில் காங் வட்டாரத் தலைவர் சத்தியமூர்த்தி ராஜீவ் காந்தி படத்திற்கு மாலை அணிவித்தார்.

முன்னதாக முன்னாள் நகரத் தலைவர் கலியமூர்த்தி அனைவரையும் வரவேற்றார், இந்நிகழ்வில் மௌன அஞ்சலியும், தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது, இதில் வட்டார துணை செயலாளர் விஜயகாந்த், ஆலங்குடி மாணவரணி குகன், சேவா தல செயலாளர் இளங்கோவன், ஆலங்குடி காங் கமிட்டி செழியன், நாகராஜ், அப்துல் ரகுமான் செந்தில் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர், முடிவில் மாணவர் காங்கிரஸ் நகர தலைவர் சந்தோஷ் நன்றி கூறினார்.

The post திருவாரூர் வலங்கைமானில் ராஜிவ் நினைவு நாள் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Rajiv Memorial Day ,Tiruvarur Valangaiman ,Valangaiman ,Rajiv Gandhi Memorial Day ,Tamil Nadu Congress Workers' Union ,Rajiv Gandhi ,Tamil Nadu Congress ,
× RELATED ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்...