×

போடியில் சத்துணவு ஊழியர்களுக்கான உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

போடி, மே 23: போடி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் போடி நகர வட்டார சத்துணவு ஊழியர்களுக்கு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் உணவு பாதுகாப்பு அலுவலர் மதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு தீயணைப்புத்துறை அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார். தேனி மாவட்ட கலெக்டர் சஜீவனா உத்தரவின்படி மாவட்ட நியமன அலுவலர் மூலம் உணவு பாதுகாப்பு அலுலர்கள் உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது. பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு சமைக்க வேண்டும். உணவு பொருட்களை சேமித்து வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சுகாதாரம் மற்றும் தீயணைப்பு பற்றி அறிவுறுத்தப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முரளிதரன், ஊரக உள்ளாட்சி துறை அலுவலர் முத்துமாரியப்பன் ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post போடியில் சத்துணவு ஊழியர்களுக்கான உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Food Safety Awareness Seminar ,Nutrition Workers ,Bodi ,Bodi Panchayat Union ,Food Safety Officer ,Madan ,Department ,Udayakumar ,safety ,Dinakaran ,
× RELATED தோட்ட பணியாளரை தாக்கியவர்கள் மீது வழக்கு