×

திமுக உறுப்பினர் அட்டை வழங்கல்

குஜிலியம்பாறை, மே 23: குஜிலியம்பாறை வடக்கு ஒன்றியம் சார்பில் திமுக உறுப்பினர்களுக்கு உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனையின் பேரில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய சேர்மன் சீனிவாசன் தலைமை வகித்து திமுக உறுப்பினர் அட்டையை வழங்கினார். முதற்கட்டமாக நேற்று டி.கூடலூர், லந்தக்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் வழங்கப்பட்டது. தொடர்ந்து குஜிலியம்பாறை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பிற ஊராட்சி பகுதிகளில் வழங்கப்பட உள்ளது. இதில் ஒன்றிய அவை தலைவர் சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜ்குமார், நிர்வாகிகள் கருப்பசாமி, ராஜமாணிக்கம், பாலசுப்பிரமணி, மோகன்ராஜ், சிவபெருமாள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக உறுப்பினர் அட்டை வழங்கல் appeared first on Dinakaran.

Tags : DMK ,Kujiliamparai ,Kujiliamparai North Union ,Food ,Minister ,A. Chakrapani ,Union ,Srinivasan ,Dinakaran ,
× RELATED மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்