×

திருவிழாவுக்கு சென்ற முதியவர் மர்மச்சாவு போலீசார் விசாரணை கே.வி.குப்பம் அருகே

கே.வி.குப்பம், மே 23: கே.வி.குப்பம் அருகே திருவிழாவுக்கு சென்ற முதியவர் மர்மமான முறையில் குட்டையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பசுமாத்தூர் கிராமத்திற்கு உட்பட்ட ஐதர்புரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (75), கூலிதொழிலாளி. இவர் அதேபகுதியில் உள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு நடந்த புஷ்ப பல்லக்கு விழாவை பார்க்க சென்றார். ஆனால் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை காணாததால் அவரது குடும்பத்தினர் விடியவிடிய பல இடங்களில் தேடினர். இந்நிலையில், நேற்று அங்குள்ள ஒருவரது விவசாய நிலத்தில் இருந்த குட்டையில் வெங்கடேசன் சடலமாக கிடந்தது ெதரியவந்தது. இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடேசன் தவறிவிழுந்து இறந்தாரா? அல்லது வேறு எப்படி இறந்தார்? என தெரியவில்லை. இதுதொடர்பாக மர்மச்சாவு என வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சத்துவாச்சாரி ஆவின் அருகில் சரமாரி வெட்டியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முத்துகிருஷ்ணன்.

The post திருவிழாவுக்கு சென்ற முதியவர் மர்மச்சாவு போலீசார் விசாரணை கே.வி.குப்பம் அருகே appeared first on Dinakaran.

Tags : Marmachau police ,KV Kuppam ,Venkatesan ,Aydarpuram ,Pasumathur village ,Vellore district.… ,
× RELATED வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி...