×

சாலைப்புதூரில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாத்தான்குளம், மே 23: சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மை காவலர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மருத்துவ அலுவலர் பிருந்தா மகேஸ்வரி தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், டெங்கு பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து டெங்கு ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் செவிலியர்கள் பொன்செல்வி, பொன்சீலி. மெர்சி, மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சாலைப்புதூரில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Dengue ,Roadmaputur ,Satankulam ,Government Primary Health Centre ,Chaliputur ,Chaliputur Government Primary Health Centre ,
× RELATED சாத்தான்குளம் தேவாலயத்தில் சுற்றுச்சூழல் ஞாயிறு கொண்டாட்டம்