×

2 டன் ரேஷன் அரிசியை மாவோயிஸ்ட் தனிப்பிரிவு போலீசார் பறிமுதல்

கோபி, மே 23: கோபி அருகே காளியூர் பிரிவில் 2 டன் ரேஷன் அரிசியை மாவோயிஸ்ட் தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோபி அருகே டி. என்.பாளையத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சத்தியமங்கலம் மாவோயிஸ்ட் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்பிரிவு போலீசார் டி.ஜி.புதூர் அருகே காளியூரில் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். சரக்கு வேனில் 50 மூட்டைகளில் 2 டன் ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்திய பெருந்துறை அருகே உள்ள ஈங்கூரை சேர்ந்த மணி என்பவர் மகன் உதயகுமார் (32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்துது பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட வேன் டிரைவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், டி.என்.பாளையம் பகுதியில் இருந்து கடத்தப்படும் ரேஷன் அரிசி காஞ்சிகோவிலில் உள்ள மில்லுக்கு கொண்டு செல்வதாகவும் இதற்கு பவானியை சேர்ந்த ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பவானியை சேர்ந்த ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post 2 டன் ரேஷன் அரிசியை மாவோயிஸ்ட் தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Maoist ,unit police ,Gobi ,Kaliyur ,Sathyamangalam ,N. Palayam ,Dinakaran ,
× RELATED நாசகார பொருளாதார கொள்கையால் கிராமம்...