×

சோலார் லைட் திருடியவர் கைது

தர்மபுரி, மே 23: தர்மபுரி மாவட்டம், அரூர் தீர்த்தமலை ஊராட்சி பொய்யப்பட்டி சட்டையன்பட்டிக்கு செல்லும் சாலையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் சோலார் லைட் அமைக்கப்பட்டுள்ளது. அந்த லைட்டை வாலிபர் ஒருவர் திருடினார். இதனை அறிந்த தீர்த்தமலை ஊராட்சி செயலர் பொன்னுசாக்கன், பொதுமக்கள் உதவியுடன் அவரை பிடித்து, அரூர் போலீசில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர், அரூர் வீரப்பன்நாயக்கன்பட்டியை சேர்ந்த வெள்ளத்துரை (28) என்பதும், மதுபோதையில் சோலார் லைட்டை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

The post சோலார் லைட் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Panchayat administration ,Poiyapatti Chattayanpatti ,Arur Thirthamal Panchayat, Dharmapuri District ,Theerthamalai ,panchayat ,Ponnusakkan ,Dinakaran ,
× RELATED பல்கலைக்கழக தேர்வில் தர்மபுரி மாணவி சாதனை