×

இந்தியா கூட்டணி வென்றால் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க தயாரா? கெஜ்ரிவால் பதில்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி வருமாறு: மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நாட்டின் அடுத்த பிரதமராகும் எண்ணம் எனக்கு இல்லை. நாட்டைக் காப்பாற்றுவதே எனது நோக்கம். மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு எதிர்க்கட்சியான இந்தியா அணியின் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும். எனக்கு பிரதமராகும் எண்ணம் இல்லை. நாங்கள் (ஆம் ஆத்மி) 22 இடங்களில் மட்டுமே போட்டியிடும் மிகச் சிறிய கட்சி. எனவே தேர்தல் முடிந்த பிறகு ராகுல்காந்தியை பிரதமராக ஏற்பீர்களா என்று கேட்டால், அப்படி எந்த விவாதமும் நடக்கவில்லை. இது ஒரு தத்துவார்த்தக் கேள்வி. நாங்கள் ஒன்றாக அமர்ந்து விவாதிப்போம்’ என்றார்.

* எனது பெற்றோரிடம் இன்று விசாரணை
கெஜ்ரிவால் கூறுகையில்,’ சுவாதி மாலிவால் எம்பி தாக்கப்பட்டது தொடர்பாக இன்று எனது வீட்டிற்கு வரும் டெல்லி போலீசார் எனது வயதான, உடல்நலக்குறைவு உள்ள என் பெற்றோரிடம் விசாரணை நடத்த உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.

The post இந்தியா கூட்டணி வென்றால் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க தயாரா? கெஜ்ரிவால் பதில் appeared first on Dinakaran.

Tags : India ,Rahul Gandhi ,Kejriwal ,New Delhi ,Delhi ,Chief Minister ,PTI ,India Alliance ,Lok Sabha elections ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல்...