×

ஒடிசாவில் 43 பேரவை தொகுதிகளுடன் 6ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை மாலை ஓய்கிறது: 58 எம்பி பதவிக்கு 889 வேட்பாளர்கள் போட்டி

புதுடெல்லி: ஒடிசாவில் 43 பேரவை தொகுதிகளுடன் நாளை மாலை 6ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. 58 எம்பி பதவிக்கு 889 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் 5 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், 6ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 25ம் தேதி 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் நடைபெற உள்ளது. பீகாரில் 8 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், ஜம்மு – காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்கண்டில் 4 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் – ரஜோரி தொகுதியில் நான்காம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருந்த வாக்குப்பதிவு, மோசமான வானிலை காரணமாக நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டது. ஒடிசாவில் 43 சட்டமன்ற தொகுதிகளிலும் வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மேற்கண்ட 58 தொகுதிகளில் 889 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மொத்தமுள்ள 543 தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

5ம் கட்ட தேர்தல் வரை 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் 6ம் கட்டமாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அதனால் அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். தேர்தல் ஆணையமும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. தொடர்ந்துவரும் 25ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தவுடன் வரும் ஜூன் 1ம் தேதி 7ம் கட்டம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறும். அதன்பின் ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

The post ஒடிசாவில் 43 பேரவை தொகுதிகளுடன் 6ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை மாலை ஓய்கிறது: 58 எம்பி பதவிக்கு 889 வேட்பாளர்கள் போட்டி appeared first on Dinakaran.

Tags : 6th phase election ,Odisha ,New Delhi ,Dinakaran ,
× RELATED ஒடிசா காங்கிரஸ் பிரச்சாரக் குழு தலைவர் ராஜினாமா