×

சமூகத்தை பிளவுபடுத்தும் வகையில் பேச வேண்டாம் என நட்சத்திர பேச்சாளர்களுக்கு அறிவுறுத்துங்கள் : பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு உத்தரவு!!

டெல்லி : நட்சத்திர பேச்சாளர்கள் மேடை நாகரிகத்தை கடைபிடிக்க அறிவுறுத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி மீதான வெறுப்பு பேச்சு புகாரில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது தேர்தல் ஆணையம். மக்களவைத் தேர்தல் பரப்புரை தொடர்பாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில்,”தேர்தல் பரப்புரையின்போது காங்கிரஸ், பாஜக பேச்சாளர்கள் கண்ணியமாக பேச வேண்டும். பரப்புரையின்போது ஜாதி, சமுதாயம், மொழி, மதரீதியான பேச்சுகளை காங்., பாஜக பேச்சாளர்கள் தவிர்க்க வேண்டும். சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தும் வகையில் காங்., பாஜக பேச்சாளர்கள் பேசக்கூடாது.

இந்திய அரசியல் சாசனம் ரத்து செய்யப்பட்டு விடும், விற்பனை செய்யப்பட்டு விடும் என்பது போன்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜக கூடுதல் கவனத்துடன் பேச உத்தரவிடப்படுகிறது. ராணுவத்தில் அரசியலை கலக்கும் வகையில் அக்னிவீர் திட்டத்தை விமர்சிக்க கூடாது. பாதுகாப்புப் படையில் பிளவு ஏற்படும் வகையில் சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறித்து பேசக் கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை காங்கிரஸ் கட்சி முறையாக கடைபிடிக்க வேண்டும். மத்தியில் ஆளும் கட்சி என்ற முறையில் பாஜக நாட்டின் சமூக கட்டமைப்பு , தேர்தல் வழிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும் என தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது,”இவ்வாறு தெரிவித்துள்ளது.

The post சமூகத்தை பிளவுபடுத்தும் வகையில் பேச வேண்டாம் என நட்சத்திர பேச்சாளர்களுக்கு அறிவுறுத்துங்கள் : பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,Delhi ,Election Commission ,J. B. Nata ,Electoral Commission ,Dinakaran ,
× RELATED இலக்கு வைத்த பாஜக மிகப்பெரிய சரிவை...