×

பாலியல் புகாரில் கைதான கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர்க்கு ஜாமின் தர காவல்துறை எதிர்ப்பு

சென்னை: பாலியல் புகாரில் கைதான கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமின் தர காவல்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க கு வாய்ப்புள்ளது என ஐகோர்ட்டில் காவல்துறை வாதம் செய்து வருகிறது. கலாஷேத்ரா முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின்பேரில் ஸ்ரீஜித் கிருஷ்ணா நீலாங்கரை போலீசால் கைது செய்யப்பட்டார். 28 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் தற்போது மருத்துவ ரீதியாக எதையும் நிரூபிக்க முடியாது. கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கவில்லை என்று ஸ்ரீஜித் கிருஷ்ணா தரப்பு கூறியுள்ளது.

The post பாலியல் புகாரில் கைதான கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர்க்கு ஜாமின் தர காவல்துறை எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kalashetra ,CHENNAI ,Sreejith Krishna ,Dinakaran ,
× RELATED மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...