×

திருச்சி மாவட்டத்தில் மாஜி படைவீரர்கள் குழந்தைகளுக்கு சார்ந்தோர் சான்று பெற அழைப்பு

 

திருச்சி. மே 22: திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா் தம் சார்ந்தோர்கள், 2023-24ம் கல்வியாண்டிற்கு தங்களது சிறார்கள் பல்வேறு கல்விகளில் சோ்வதற்கு சார்ந்தோர் சான்று ஆன்லைனில் http://exwel.tn.gov.in என்ற முகவரியின் மூலம் விண்ணப்பித்து பெற்றிட வழிமுறைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி சார்ந்தோர் சான்று பெறலாம்.

மேலும் அலுவலக வேலை நாட்களில் அலுவலகத்திற்கு வர இயலும் பட்சத்தில் கீழ்க்காணும் ஆவணங்களுடன் விண்ணப்பித்து சான்று பெற்றிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கல்லூரி சோ்க்கைக்கான விண்ணப்ப படிவத்தின் எண், முன்னாள் படைவீரா் படைவிலகல் சான்று மற்றும் நகல், அடையாள அட்டை, இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட 10-ம்வகுப்பு, +2மதிப்பெண், 10-ம் வகுப்பு பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், மகன்/மகள் பெயா் தனியே Part-II order publication செய்யப்பட்டிருந்தால் அதன் நகல் இணைக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நோிலோ அல்லது 0431-2960579 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொண்டு தொிந்து கொள்ளலாம் என்ற அதில் குறிப்பிட்டுள்ளார்.

The post திருச்சி மாவட்டத்தில் மாஜி படைவீரர்கள் குழந்தைகளுக்கு சார்ந்தோர் சான்று பெற அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy district ,Trichy ,Collector ,Pradeep Kumar Voui ,
× RELATED திருச்சி அண்ணா நகர் கிளையில் கூட்டுறவு துறை பணியாளர் நாள்