×

மழையால் வடிகால் பணி பாதிப்பு

 

கோவை, மே 22: கோவை ரயில் நிலையம் லங்கா கார்னர் பாலம் பகுதியில் மழை நீர் வடிகால் பணி துவக்கப்பட்டது. மழை பெய்தால் குளம் போல் நீர் தேங்குவதாலும், அவினாசி ரோடு பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து வரும் நீர் பாதை அடைப்பை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பகுதியில் 7 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி சிறு பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியை 3 நாளில் முடிக்க திட்டமிடப்பட்டு இந்த வழியாக வரும் வாகனங்கள் அருகேயுள்ள பாதையை பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் கனமழை பெய்து வரும் நேரத்தில் பணிகள் துவங்கியிருப்பதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரெடிமேட் பாலம் கட்டும் பணியை வெயில் காலத்தில் நடத்தியிருக்க வேண்டும். கடந்த சில மாதங்களாக எந்த பணியும் நடத்தாமல் இப்போது மழை நீர் தேங்கும் நிலையில் பணி நடத்துவதால் இந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

The post மழையால் வடிகால் பணி பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Lanka ,Avinasi road bridge ,Dinakaran ,
× RELATED கோவை பந்தய சாலை நடைபாதையில் இருந்த...