×

பராமரிப்பு பணி காரணமாக புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் இன்று செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை, மே 22: வியாசர்பாடி கணேசபுரம் மேம்பால பணிகளுக்காக, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் கழிவுநீர் உந்து குழாய் இணைக்கும் பணி மேற்கொள்ளப்படுவதால் இன்று மாலை 4 மணி முதல் நாளை காலை 6 மணி வரை புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் செயல்படாது. எனவே, ராயபுரம், திரு.வி.க நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மேன்ஹோல்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறினால் கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற ராயபுரம் துணை பகுதி பொறியாளரை 8144930905, 8144930255 என்ற எண்ணிலும், திரு.வி.க நகர் துணை பகுதிப் பொறியாளரை 8144930906, 8144930216, 8144930217 என்ற எண்ணிலும், அண்ணா நகர் துணை பகுதிப் பொறியாளரை 8144930908, 8144930258 என்ற எண்ணிலும், தேனாம்பேட்டை துணை பகுதிப் பொறியாளரை 8144930909, 8144930111 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளாலாம், என சென்னை குடிநீர் வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பராமரிப்பு பணி காரணமாக புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் இன்று செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Purasaivakkam Sewage Dewatering Plant ,Chennai ,Vyasarpadi Ganesapuram ,Purasaivakkam Sewage Dewatering Station ,Dr. Ambedkar College Road ,Dinakaran ,
× RELATED சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு...