×

கலைஞர் நூலகத்தில் ஆளுமைப்பயிற்சி

மதுரை, மே 22: பொதுநூலக இயக்ககத்தின் சார்பில் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மே 25ம் தேதி துவங்கி ஜூன் 3ம் தேதி வரை நுண்கலைகள் மூலம் ஆளுமை வளர்ச்சி பயிற்சி நடத்தப்படுகிறது. தினமும் மாலை 2மணி முதல் மாலை 4மணி வரை 10 நாட்கள் நுண்கலைகளான ஓவியம், இலக்கியம், நாடகம், இசை மற்றும் அறிவியல் கலையான சினிமா ஆகியவற்றின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதன் மூலம் புலன்களைக் கூர்மையாக்கி, ஆளுமையை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிலரங்காக இது அமைகிறது. விருப்பம் உள்ள 18வயது முதல் 25 வயதிற்குட்பட்ட இளையோர்கள், மாணவர்கள் தங்கள் பெயரினை https://tinyurl.com/yc6jf2cw லிங்க் மூலம் பதிவு செய்யலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கலைடாஸ்கோப், மாற்றுக்கல்வி, கலை மற்றும் பண்பாட்டு மையம் செய்துள்ளது.

The post கலைஞர் நூலகத்தில் ஆளுமைப்பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Public Library Directorate ,Artist ,Centenary Library ,Dinakaran ,
× RELATED மோசடியாக நீட் தேர்வு எழுதிய நபர்களின்...