×

அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை திருவண்ணாமலை கிரிவலப்பாதையில்

திருவண்ணாமலை, மே 22: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பை அதிகாரிகள் நேற்று அகற்றினர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஆணாய்பிறந்தான் கிராமத்திற்கு உட்பட்ட நந்தி மண்டபம் குளம் அருகே அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக வந்த புகாரின் பேரில் அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஜோதி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, 1,218 சதுர அடி இடத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது தெரியவந்தது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்திய அதிகாரிகள், ₹85 லட்சம் மதிப்பிலான அந்த இடத்தில் அண்ணாமலையார் கோயில் சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைத்து, கம்பி முள்வேலி அமைத்து நடவடிக்கை எடுத்தனர்.

The post அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Kriwalavathi ,Annamalaiyar temple ,Tiruvannamalai ,Tiruvannamalai Kriwalabathi ,Nandi Mandapam pond ,Anaiparanthan village ,Tiruvannamalai Krivalabathi ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரமோற்சவ...